தமிழ்நாடு

திருநங்கை பிரித்திகா யாசினிக்கு தர்மபுரியில் சப்-இன்ஸ்பெக்டர் பணி

திருநங்கை பிரித்திகா யாசினிக்கு தர்மபுரியில் சப்-இன்ஸ்பெக்டர் பணி

Rasus

இந்தியாவின் முதல் திருநங்கை காவல்துறை துணை ஆய்வாளரான பிரித்திகா யாசினி, தர்மபுரியில் பணி அமர்த்தப்பட உள்ளார்.

இந்தியாவின் முதல் திருநங்கை காவல்துறை துணை ஆய்வாளராக சேலத்தை சேர்ந்த பிரித்தியா யாசினி கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். ஒரு ஆண்டு காலமாக அவர் பயிற்சி பெற்று வந்த நிலையில் நேற்று பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. சென்னையை அடுத்த வண்டலூர் அருகே தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் முதலைமைச்சர் பழனிசாமி பங்கேற்றார். நிறைவு விழாவில் சிலம்பாட்டம், கராத்தே, நெருப்பு விளையாட்டு உள்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன‌. பிரித்திகா யாசினிக்கு தர்மபுரியில் பணி அமர்த்தப்பட உள்ளார்.