புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
இது இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி என்பதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அழைத்துவரப்படும் 600க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கும் என அறிவிப்பு.
போட்டியை காலை 8 மணிக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.