விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 13ஆவது நாளாக பட்டாசு உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தத்தை தொடர்வதால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
சுற்றுச்சூழல் விதிகளிலிருந்து பட்டாசுக்கு விலக்கு கோரி கடந்த 26ஆம் தேதி முதல் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 4 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். பட்டாசுக்கு தடை விதிக்ககோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் 22-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.
இந்நிலையில் பட்டாசுத் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம் தொடரும் என அறிவித்துள்ளனர். அதனால் உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளைக் கூட பூர்த்தி செய்துகொள்ள முடியாமல் தவிப்பதாக பட்டாசு தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.