தமிழ்நாடு

சுற்றுச்சூழல் விதிகளிலிருந்து பட்டாசுக்கு விலக்கு கோரி தொடரும் போராட்டம்

சுற்றுச்சூழல் விதிகளிலிருந்து பட்டாசுக்கு விலக்கு கோரி தொடரும் போராட்டம்

Rasus

சுற்றுச்சூழல் விதிகளிலிருந்து பட்டாசுக்கு விலக்கு கோரி சிவகாசியில் பட்டாசு ஆலைத் தொழிலாளர்கள் தொடங்கியுள்ள வேலைநிறுத்தம் மூன்றாவது நாளாகத் தொடரும் நிலையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெ‌ற உள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் டெல்லி, மும்பை, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட வெளிமாநில பட்டாசு உற்பத்தியாளர்களும் கலந்து கொள்கின்றனர். பட்டாசுக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் பட்டாசுத் தொழிலுக்கு ஆபத்து ஏற்படும் என்று உற்பத்தியாளர்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதன் விளைவாக, பட்டாசுத் தொழில் எதிர்நோக்கியிருக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வலியுறுத்தி சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் காலவரம்பற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டம் காரணமாக சுமார் 4 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.