தமிழ்நாடு

முதலைகளை தேடுவதில் தீயணைப்புத்துறையினர் தீவிரம்

முதலைகளை தேடுவதில் தீயணைப்புத்துறையினர் தீவிரம்

webteam

கோவூரில் வெட்டாற்றில் முதலைகள் இருப்பதாக மக்கள் கூறியதை அடுத்து, அவற்றை பிடிக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 

கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகையில் உள்ள வெட்டாற்றில் முதலைகள் இருப்பதாகவும் இதனால் இந்த வழியே செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. 5க்கும் அதிகமான முதலைகள் ஆற்றில் இருப்பதாக மக்கள் கூறி இருந்தனர்.

இந்நிலையில் வெட்டாற்றில் உள்ள முதலைகளை பிடிக்க தீயணைப்புத்துறையினர் தீவிரமாக இறங்கி உள்ளனர். தொடர்மழையின் போது வெளிமாவட்டங்களிலிருந்து இந்த முதலைகள் தண்ணீரில் அடித்து வரப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், விளாம்பக்கம், துண்டம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வெட்டாற்றை கடந்தே வெளியிடங்களுக்கு செல்ல வேண்டும் என்பதால் ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கவும் கோரிக்கை விடுக்கின்றனர்.