தமிழ்நாடு

போராட்டத்திலும், துப்புரவு தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கிய தீயணைப்பு வீரர்கள்

போராட்டத்திலும், துப்புரவு தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கிய தீயணைப்பு வீரர்கள்

webteam

புதுச்சேரி தீயணைப்பு துறையில் பணிபுரியும் வீரர்களுக்கு 8 மணி நேர வேலையை அமல்படுத்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கையை முன் வைத்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்

புதுச்சேரி தீயணைப்புத்துறை ஊழியர்கள் தற்போது 12 மணி நேரம் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் தீயணைப்பு ஊழியர்களுக்கு 8 மணி நேர வேலையை அமல்படுத்த வேண்டும் எனவும் புதுச்சேரி மாநில தீயணைப்பு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளத்தை வழங்க வேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். மேலும் தீயணைப்புத்துறைக்கு இயக்குனர் பதவியை உருவாக்க வேண்டும், தீயணைப்பு துறைக்கு புதிய வாகனங்களை வாங்க வேண்டும் என்றும் தீயணைப்பு வீரர்களுக்கு பாதுகாப்பு கவசம் மற்றும் கருவிகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீயணைப்பு வீரர்கள் பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தங்களுடைய கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாததை கண்டித்து, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உழைப்பாளர் தினமான இன்று 8 மணி நேரம் மட்டுமே பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி இன்று காலை 8 மணி முதல் 4 வரையும், மாலை 5 மணி முதல் இரவு 1 மணி வரை மட்டுமே பணியில் ஈடுபட்டுள்ளனர். இவற்றுக்கு இடைப்பட்ட நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் யாரும் தீயணைப்பு நிலையத்தில் இருக்க மாட்டோம் என்றும், அந்த நேரத்தில் தீவிபத்து மற்றும் உயிர்மீட்பு ஏற்பட்டால் அரசே பொறுப்பேற்க வேண்டுமென தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் உழைப்பாளர் தினமான இன்று தீயணைப்பு துறை, அங்கு துப்புறவு தொழிலாளர்களுக்கு  இனிப்பு வழங்கினர்.