தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள கற்பகம் கூட்டுறவு அங்காடியில் பட்டாசு சிறப்பு விற்பனை தொடங்கியது. பட்டாசு விற்பனையை மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தொடங்கி வைத்தார்.
பின்னர் பேசிய ஆட்சியர், கடந்த ஆண்டு கற்பகம் அங்காடி மூலம் 83 லட்சம் ரூபாய்க்கு பட்டாசு விற்பனை செய்யப்பட்டதாகவும் இந்த ஆண்டிற்கு 1 கோடி ரூபாய் வரை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் தனியாக பட்டாசு கடை வைத்திருக்கும் கடை உரிமையாளர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது என்றும், அதில் பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் கடைகளில் குண்டு பல்ப் பயன்படுத்தக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், பட்டாசு வெடிப்பதால் உண்டாகும் மாசு அளவை கண்காணிக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.