தேனியில் பிரபல ஜவுளிக்கடையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
தேனி - மதுரை சாலையில் ஆனந்தம் என்ற ஜவுளி மற்றும் பல்பொருள் கடை அமைந்துள்ளது. இங்கு அதிகாலை 4 மணியளவில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. ஐந்து மாடிகளைக் கொண்ட இக்கட்டிடத்தில் முதலில் கீழ்தளத்தில் தீப்பிடித்தாகத் தெரிகிறது. தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து ஏற்பட்ட கடையினை மாவட்ட காவல் கண்கானிப்பாளர் பாஸ்கரன் நேரில் ஆய்வு செய்தார். இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்து வருகிறது.