இன்று ஒரே நாளில் மழைத்தண்ணீரில் சிக்கிய 195 பேரை தீயணைப்புத்துறை மீட்டுள்ளது.
சென்னையில் கனமழையால் முக்கிய சாலைகள், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது உள்பட பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மீட்புப்பணிகளில் தீயணைப்புத் துறையினர் 24 மணி நேரமும் தீவிரமாக மணியாற்றி வருகின்றனர். இன்று காலையில் இருந்து தற்போது வரை தீயணைப்புத்துறை கட்டுப்பாட்டு அறைக்கு 13 அழைப்புகள் வந்துள்ளது. சென்னையில் 70 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது. அதனை தீயணைத்துறையினர் வெட்டி அகற்றி உள்ளனர்.
16 இடங்களில் தேங்கியுள்ள மழைத்தண்ணீரை ராட்சத பம்ப் மூலம் தீயணைப்புத் துறையினர் வெளியேற்றி உள்ளனர். 6 இடங்களில் கட்டட இடிபாடு சம்பவங்கள் நடந்துள்ளது. மழைத்தண்ணீரில் சிக்கிய வயது முதிந்தோர், கர்ப்பிணிகள், குழந்தைகள் என இதுவரை 195 பேரை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர். 10 விலங்குகளை மீட்டுள்ளதாகவும் தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.