சென்னை சவுகார்பேட்டையில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இரண்டு கடைகள் எரிந்து சேதமாயின.
மிண்ட் தெருவில் 3 மாடிகள் கொண்ட வணிக வளாகத்தில் நள்ளிரவு திடீரென தீபற்றியது. இதனையறிந்து அங்கு 4 வாகனங்களில் விரைந்த தீயணைப்புத்துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஆனால் முன்னதாகவே வளாகத்தின் முதல் தளத்தில் இருந்த லெதர் பேக் கடை மற்றும் அலுவலகம் முற்றிலும் எரிந்து சேதமானது. இந்த கட்டடம் முறையான பராமரிப்பு இன்றியும், மின் ஒயர் இணைப்புகள் ஒழுங்கற்ற முறையில் காணப்பட்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.