சதுரகிரி மலைப் பகுதியில் எரிந்து வரும் காட்டுத்தீயால், கோயிலுக்குச் சென்ற பக்தர்களுக்கு பாதிப்பில்லை என வனத்துறை தெரிவித்துள்ளது.
இப்பகுதியில் நேற்று இரவு இடி மின்னல் அதிகமிருந்த நிலையில், பெருமாள் மொட்டை, தவசி பாறை ஆகிய இரு இடங்க ளில் தீப்பற்றியது. இதையடுத்து, சதுரகிரி மலைப்பகுதியில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் நிலையில், இந்த காட்டுத்தீயால் பக்தர்களுக்கு பாதிப்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்குச் சென்று வர மாற்றுப்பாதை இருந்தாலும், பாதுகாப்பு கருதி அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
மேலும், கோயிலுக்கு ஏற்கனவே சென்ற பக்தர்கள் பாதுகாப்பாக கீழே இறங்கி வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.