தமிழ்நாடு

ராயப்பேட்டை அங்காடியில் தீ விபத்து

ராயப்பேட்டை அங்காடியில் தீ விபத்து

webteam

சென்னை ராயப்பேட்டையில் உள்ள பல்பொருள் அங்காடியில் நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது.‌ இதில் 30 லட்சம் மதிபுள்ள பொருட்கள் எரிந்து நாசாமாகின. 

சென்னை ராயப்பேட்டையில், பல்பொருள் அங்காடி ஒன்று உள்ளது. வழக்கம் போல நேற்றிரவு அங்காடியை பூட்டிவிட்டு ஊழியர்கள் சென்றனர். அங்கு திடீரென்று உயர் மின் அழுத்தம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் தீயணைப்புதுறைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த அவர்கள், 20 நிமிடங்கள் முயற்சித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.