தமிழ்நாடு

மன்னார்குடி அதிமுக அலுவலகத்துக்கு தீ வைப்பு

மன்னார்குடி அதிமுக அலுவலகத்துக்கு தீ வைப்பு

webteam

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியிலுள்ள அதிமுக அலுவலகத்திற்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

அதிமுக அலுவலகத்துக்கு மர்ம நபர்கள் தீ வைத்த நிலையில், முன்பக்கம் இருந்த கீற்றுக் கொட்டகையில் தீ பரவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைத்தனர். அதிமுக அலுவலகத்திற்கு அருகிலுள்ள இந்திய வங்கியின் சிசிடிவி கேமராவை துணியால் மறைத்துவிட்டு பின்னர் அலுவலகத்திற்கு தீ வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இருப்பினும், வங்கி அதிகாரிகள், சிசிடிவி காட்சியைக் கொடுத்த பின்புதான் தீ வைத்தது யார் என்று தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.