மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான சிறுதாவூர் பங்களா அருகே தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமாக காஞ்சிபுரம் அருகே சிறுதாவூர் பங்களா உள்ளது. ஜெயலலிதா உயிருடன் இருந்த போது ஓய்விற்காக இங்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில் இன்று சிறுதாவூர் பங்களா அருகே திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பங்களாவிற்கு பின்புறமுள்ள இடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக இந்த தகவல் தீயணைப்பு வீரர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பற்றி எரிந்த தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதன் காரணமாக பங்களாவிற்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை.
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது பங்களா பராமரிக்கப்பட்டது போல தற்போது பராமரிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.