தமிழ்நாடு

மிலிட்டரி கேண்டீனிலும் பரவிய தீ: போராடி அணைப்பு

மிலிட்டரி கேண்டீனிலும் பரவிய தீ: போராடி அணைப்பு

Rasus

சேலம் பெரியபுதூர் அருகே வாகன உதிரிபாகங்கள் விற்கும் கடையில் தீவிபத்து ஏற்பட்டது.

மிட்டாபுதூரில் சதீஷ்குமார் என்பவருக்கு சொந்தமான கடையின் தரைதளம் மற்றும் முதல் தளத்தில் தீப்பற்றியதால் புகை வெளியேறியது. தகவலறிந்து தீயணைப்பு துறையினர் வருவதற்குள்ளாக, கடையின் ஒரு பகுதியில் வைக்கப்பட்டிருந்த எஞ்சின் ஆயிலில் தீப்பற்றியதால் தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது.

இதனிடையே, தரைதளத்தின் ஒரு பகுதியில் உள்ள மிலிட்டரி கேண்டீன் பகுதியிலும் தீ பரவ தொடங்கியதால் அங்குள்ள பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டன. 3 தீயணைப்பு வாகனங்கள் மற்றும், மாநகராட்சி குடிநீர் வாகனங்கள் கொண்டு தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள் நாசமாயின எனக் கூறப்பட்டுள்ளது. மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாமென தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.