தமிழ்நாடு

பர்னிச்சர் தொழிற்சாலையில் தீவிபத்து : 20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்

பர்னிச்சர் தொழிற்சாலையில் தீவிபத்து : 20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்

webteam

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் பர்னிச்சர் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த திருமுல்லிவாக்கம் பகுதியில் சிப்காட் பகுதியில் பர்னிச்சர் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இன்று மதியம் திடீரென மின்கசிவு காரணமாக அங்கு தீவிபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த தாம்பரம், தாம்பரம் சானடோரியம், பூந்தமல்லி ஆகிய பகுதியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் 3 தீயணைப்பு வாகனங்களுடன் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீவிபத்தில் சுமார் 20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகியதாக கூறப்படுகிறது. மதிய உணவு வேளை என்பதால் ஊழியர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

இந்த விபத்து குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.