தமிழ்நாடு

தி.நகரில் மீண்டும் தீ விபத்து

தி.நகரில் மீண்டும் தீ விபத்து

webteam

தி.நகர் சென்னை சில்க்ஸ் கட்டடம் அருகே உள்ள உணவகம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. 
தி.நகர் உஸ்மான் சாலையிலுள்ள பிகேஆர் உணவகத்தின் சமையலறை பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் இடிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்கள், உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று தீயை, கட்டுக்குள் கொண்டுவந்தனர். அந்த உணவகத்தின் சமையலறைப் பகுதியில் உள்ள புகை போக்கியில் ஏற்பட்ட கோளாறால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  தீ விபத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை.