தமிழ்நாடு

மின்பகிர்மான நிறுவனத்தில் பயங்கர தீ: மின்விநியோகம் பாதிப்பு

மின்பகிர்மான நிறுவனத்தில் பயங்கர தீ: மின்விநியோகம் பாதிப்பு

webteam

சேலத்தில் மின் பகிர்மான நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதையடுத்து பல்வேறு மாவட்டங்களுக்கு மின் விநியோகம் பாதிக்கப் பட்டது. 

சேலம், கே.ஆர்.தோப்பூர் பகுதியில் தமிழக அரசின் பவர் கிரிட் எனப்படும் மின் பகிர்மான நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் இருந்து பல் வேறு பகுதிகளுக்கு மின்சாரம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டிரான்ஸ்பார்மர் ஒன்றில் திடீரென தீ பிடித்து வெடித்தது. தீயை கட்டுப்படுத்த முடியாததால் தீ வேகமாக பரவியது. இதனை தொடர்ந்து ஓமலூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங் கள் வரவழைக்கப்பட்டன. 

தீயின் வேகம் குறையாமல் தொடர்ந்து எரிந்து வந்த நிலையில், ஒரு மணி நேரத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதனால் பல்வேறு மாவட்டங்களுக்கு மின்சாரம் அனுப்பும் பணி தற்போது தடைப்பட்டுள்ளது.