தமிழ்நாடு

கந்துவட்டி கேட்டு மிரட்டிய பைனான்சியர் கைது

கந்துவட்டி கேட்டு மிரட்டிய பைனான்சியர் கைது

webteam

தொழிலதிபர் ஒருவரை கந்து வட்டி கேட்டு மிரட்டி சித்ரவதை செய்த பைனான்சியர் மோகன்குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னையில் கிடங்குகள் வாடகைக்கு விடும் தொழில் செய்து வரும் பாலசுப்ரமணியன். தொழில் மேம்பாட்டுக்காக பிகே பைனான்சியல் சர்வீஸஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் மோகன்குமார் என்பவரிடம் கடந்த 2008ம் ஆண்டு, ஒருகோடியே 50 லட்ச ரூபாய் கடனாகப் பெற்றிருக்கிறார். அதற்கு வட்டியோடு சேர்த்து 5 கோடியே 18 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் திரும்ப செலுத்தி இருக்கிறார். அதாவது சுமார் 4 கோடி ரூபாய் கூடுதலாகக் கொடுத்துள்ளார். அது போதாது என்று கூறிய மோகன்குமார், கூடுதலாக 45 லட்ச ரூபாய் தருமாறு பாலசுப்ரமணியனை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பாலசுப்ரமணியன் காவல்துறையினரிடம் புகார் அளிக்க, கந்து வட்டி தடுப்புப் பிரிவு மோகன்குமார் மீது வழக்கு பதிவு செய்தது. விசாரணையில் மோகன்குமார், மிரட்டியது உறுதியானதை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஐர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.