தமிழ்நாடு

இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

Rasus

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் கடந்த ஆண்டு நவம்பர் 16-ஆம் தேதி தொடங்கியது. இதற்காக 4 நாட்கள் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. புதிதாக பெயர் சேர்க்கவும், நீக்கவும், திருத்தம் செய்யவும் அளிக்கப்பட்ட விண்ணப்ப படிவங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டன. அவற்றில் உரிய முறையில் அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர்கள் சேர்க்கப்பட்டன.

திருத்தப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் தமிழகம் முழுவதும் இன்று வெளியிடப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர்கள் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட உள்ளனர்.

சென்னையில் இறுதி வாக்காளர் பட்டியலை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிடுகிறார். புதிதாக பெயர்களைச் சேர்ந்த சில வாக்காளர்களுக்கு தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25-ஆம் தேதி, வாக்காளர் அடையாள அட்டை அளிக்கப்பட உள்ளது.