கத்திக்குத்து கோப்பு புகைப்படம்
தமிழ்நாடு

பண்ருட்டியில் பரபரப்பு - முதல்வர் மருந்தக பெண் ஊழியருக்கு கத்திக்குத்து!

பண்ருட்டியில் முதல்வர் மருந்தக பெண் ஊழியர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

பண்ருட்டி காமராஜ் நகரில் உள்ள தமிழக முதல்வர் மருந்தகத்தில் பணியாற்றும் 23 வயது திவ்யா மீது, பழக்கமுள்ள சந்தோஷ் என்ற இளைஞர் திடீரென மருந்தகத்துக்குள் நுழைந்து கத்தியால் பலமுறை குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடுமையாக காயமடைந்த திவ்யா அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். பொதுமக்கள் சந்தோஷை பிடித்து அறையில் பூட்டி வைத்து போலீசுக்கு ஒப்படைத்தனர்.

பண்ருட்டி காமராஜ் நகரில் செயல்பட்டுவரும் தமிழக முதல்வர் மருந்தகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வரும் திவ்யா (வயது 23) என்பவர் வழக்கம்போல் பணியில் இருந்தபோது, மருந்தகத்திற்கு வந்த வாலிபர் ஒருவர் உள்ளே நுழைந்து அவரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.

கத்தி

இதில் படுகாயமடைந்த அவரின் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை காப்பாற்றி பண்ருட்டி அரசுமருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கத்தியால் குத்திய நபரை பொதுமக்கள் பிடித்து அறையில் பூட்டி வைத்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

இந்நிலையில் காவல்துறை விசாரணையில் கத்தியால் குத்திய நபர் சந்தோஷ் என்பது தெரியவந்துள்ளது. அவரை காவல்நிலையத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திவ்யாவுக்கும் சந்தோஷுக்கும் 5 ஆண்டுகளாக பழக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.