தமிழ்நாடு

கண் கலங்க வைத்த தாய் யானையின் பாசப் போராட்டம் ! - வீடியோ

கண் கலங்க வைத்த தாய் யானையின் பாசப் போராட்டம் ! - வீடியோ

தாயுணர்வு என்பது மனிதர்களுக்கானது மட்டுமல்ல, அது விலங்குகளுக்கும் பொருந்தும். அப்படித்தான் ஒரு தாய் யானை தனது போராட்டம் மூலம் தனது குட்டியை பத்திரமாக ஒரு குழியில் இருந்து வெளியேற்ற போராடியது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கடம்பூர் வனப்பகுதியில் இருந்து  வந்த 3 காட்டு யானைகள் கானக்குந்தூர் கிராமப் பகுதிக்குள் நுழைந்தன. விளைநிலங்கள் வழியாக வந்த யானைகள் 15 அடி ஆழ விவசாயக் கிணற்றில் தவறி விழுந்தன. கிணற்றின் சருக்கலான பகுதி வழியாக கிணற்றுக்குள் விழுந்ததால், யானைகளுக்கு காயம் ஏதும் ஏற்படாத நிலையில், அங்கிருந்து வெளியேறத் தெரியாமல், மூன்று யானைகளும் தவித்துவந்தன. அதில் ஒரு குட்டி யானையும் அடங்கும்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சத்தியமங்கலம் வனத்துறை அதிகாரிகள், ஜே.சி.பி. எந்திரம் மூலம் கிணற்றில் ஒரு பகுதியை தோண்டி, யானைகள் வெளியேறுவதற்கு பாதை அமைத்தனர். அந்த வழியாக வெளியேற்றப்பட்ட 3 யானைகளும், பின்னர் கடம்பூர் வனப்பகுதிக்குள் விரட்டிவிடப்பட்டன. இந்த மீட்பு முயற்சியில் தனது குட்டி யானையை வெளியேற்ற தாய் யானை பட்டப்பாடு, காண்பவரை கண்கலங்கச் செய்தது.