தமிழ்நாடு

 "பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு உயரதிகாரி பாலியல் தொந்தரவு"- கனிமொழி கண்டனம்

 "பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு உயரதிகாரி பாலியல் தொந்தரவு"- கனிமொழி கண்டனம்

JustinDurai

அதிமுக ஆட்சியில் பாதுகாப்பு தரும் போலீசாருக்கே பாதுகாப்பு தேவைப்படுகிறது என கனிமொழி விமர்சித்துள்ளார். 

தமிழக முதல்வர் பாதுகாப்பு பணியின்போது தன்னிடம் தவறாக நடக்க முயன்ற ஐபிஎஸ் அதிகாரி குறித்து பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் உள்துறைச் செயலாளர், டிஜிபி ஆகியோரிடம் புகார் அளித்தார். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''அதிமுக ஆட்சியில் பாதுகாப்பு தரும் போலீசாருக்கே பாதுகாப்பு தேவைப்படுகிறது. ஒரு பெண் IPS அதிகாரி தனது உயர் அதிகாரியால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதை கண்டுகொள்ளாத முதலமைச்சர் சாதாரண பெண்களுக்கான பாதுகாப்பை எப்படி உறுதி செய்வார்?'' எனக் குறிப்பிட்டுள்ளார்.