மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்த தலைமை பெண் காவலரின் குடும்பத்திற்கு சக காவலர்கள் ஒன்றிணைந்து சுமார் 13 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளனர்.
உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தவர் பூங்கா. இவர் கடந்த ஜனவரி மாதம் புற்றுநோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். இந்த நிலையில், அவருடன் பயிற்சி மேற்கொண்ட 2,552 காவலர்கள் ஒன்றிணைந்து 12 லட்சத்து 76 ஆயிரத்து 500 ரூபாயை நிதியாக திரட்டினர். அதனை உயிரிழந்த பெண் காவலரின் குடும்பத்திற்கு வழங்கினர்.