தமிழ்நாடு

மத்திய நிதிநிலை அறிக்கை: மக்களிடையே நம்பிக்கையை உருவாக்கும் - ஓபிஎஸ் வரவேற்பு

kaleelrahman

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை சாத்தியமானவைகளை உள்ளடக்கியதாக இருப்பதாகவும், புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையினை மக்களிடையே உருவாக்கும் எனவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் பட்ஜெட் குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் ஓ.பன்னீர்செல்வம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 9.2 விழுக்காடாக இருக்கும் என்று குறிப்பிடப்படிருப்பது அனைத்து துறைகளும் வளர்ச்சி பெறும் வகையில் மத்திய அரசினால் எடுக்கப்பட்ட சிறப்பான நடவடிக்கைகளை படம்பிடித்து காட்டுவதாக கூறியுள்ளார்.

80 லட்சம் வீடுகள் கட்ட 48,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது நிச்சயம் வீடில்லாத ஏழையெளிய மக்களுக்கு வீடுகள் கிடைக்க வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வேளாண் வளர்ச்சி மற்றும் வேளாண் நவீனமயமாக்கல் ஆகியவற்றிற்கு நிதிநிலை அறிக்கையில் வழிவகை செய்யப்பட்டு இருப்பதாக கூறியுள்ள ஓ பன்னீர்செல்வம், பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமான அனைத்து துறைகளையும் மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.