வருடத்தில் ஒருமுறைதான் பிப்ரவரி மாதம் வரவேண்டுமா..? என ஏங்கும் அளவில் இன்றைய இளம் காதலர்களுக்கு பிப்ரவரி மாதம் என்றாலே அவ்வளவு பிரியம். பிப்ரவரி 14ம் தேதியான காதலர் தினத்தைதான் அன்றைய இளைஞர்கள் கொண்டாடினார்கள். ஆனால் இன்றோ இளைஞர்கள் பிப்ரவரி மாதத்தில் வரும் ஒவ்வொரு நாளையுமே கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு நாளுக்கும் அவர்கள் ஒவ்வொரு பெயர் வைத்து பிப்ரவரி மாதத்தை கலர்ஃபுல்லாக மாற்றிவிடுகின்றனர். உங்களுக்கும் இளைஞர்கள் என்னென்ன தினங்களைக் கொண்டாடுகிறார்கள் என தெரிந்துகொள்ள ஆர்வம் இருக்கிறதுதானே..? அப்படியானால் இதை படியுங்கள்..
பிப்ரவரி 07: ரோஸ் தினம் (Rose Day)
பிப்ரவரி 08: ப்ரோப்போஸ் தினம் (ProposeDay)
பிப்ரவரி 09: சாக்லேட் தினம் (ChocolateDay)
பிப்ரவரி 10: டெடி தினம் (TeddyDay)
பிப்ரவரி 11: பிராமிஸ் தினம் (Promise day)
பிப்ரவரி 12: முத்த தினம் (Kiss Day)
பிப்ரவரி 13: கட்டிப்பிடித்தல் தினம் (Hug day)
பிப்ரவரி 14: காதலர் தினம் (ValentinesDay)
பிப்ரவரி 15: ஸ்லப் தினம் (Slap Day)
பிப்ரவரி 16: கிக் தினம் KickDay
பிப்ரவரி 17: பெர்ஃபியூம் தினம் (Perfume Day)
பிப்ரவரி 18: ஃபிலிர்ட் தினம் (Flirt Day)
பிப்ரவரி 19: கன்ஃபெசன் தினம் (Confession Day)
பிப்ரவரி 20: மிஸ்ஸிங் தினம் (Missing Day)
பிப்ரவரி 21: பிரேக்அப் தினம் (Breakup Day)
ஒருவர் நீண்ட நாட்களாக காதலில் இருக்கலாம். ஆனால் அதனை தான் காதலிப்பவரிடம் சொல்லாமல் இருக்கலாம். அத்தகைய நபர்களுக்கு ப்ரோப்போஸ் தினம் உதவுமாம். எப்படா இவரை விட்டு பிரியலாம் என நினைப்பவர்களுக்கு பிரேக்அப் தினம் உதவும் என்கின்றனர் இன்றைய இளசுகள்.
ஒருகாலத்தில் ஒரு காதல் லெட்டரை எழுதிவைத்துவிட்டு அதனை தாங்கள் காதலிப்பவர்களிடம் கொடுக்க வருடக்கணக்கில் காத்திருந்தவர்கள் நம் முன்னோர்கள். ஆனால் இன்றோ, ஒரு மாதத்திலே காதல் தொடங்கி அந்த மாதத்திலே முடிந்துபோகும் அளவிற்கு அசூர வளர்ச்சி கண்டுள்ளது. காதல் இல்லாத வாழ்க்கை ஆபத்தானது. அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் காதல் என்ற போதையில் ஏமாந்து போவது.. பிறரை ஏமாற்றிவிடுவது போன்ற சம்பவங்கள் பெற்றோர்கள் கவலையுற செய்கின்றன. காதலர் தினத்தை கொண்டாடினால் மட்டும் போதாது. வாழ்க்கையில் ஒவ்வொரு நாளிலும் ஏன் ஒவ்வொரு நொடியிலும் கூட நீங்கள் காதலிப்பவர்கள் மீது பற்றாக இருந்தால் தான் அந்தக் காதல் இன்னும் அழகாக மாறும். அதில் யாருக்கு சந்தேகம் இருக்குமா என்ன?