பள்ளிக்கல்வித் துறை உத்தரவு முகநூல்
தமிழ்நாடு

விவரங்களை பதிவேற்றம் செய்ய பிப்.17-ம் தேதிதான் கடைசி நாள்: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு!

இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

PT WEB

மத்திய அரசின் இணையதளத்தில் பள்ளி மாணவர், ஆசிரியர் விவரங்களை பிப்ரவரி 17ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில், பள்ளிகள் சார்ந்த தரவும், மாணவர்கள், ஆசிரியர்கள் பற்றிய விவரங்களை U.D.I.S. E இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை பிப்ரவரி 17ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும், அதற்கேற்ப ஒரு பள்ளியில் இருந்து விலகி, மற்றொரு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் விவரங்களையும் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு விரைந்து முடித்து அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.