3 குழந்தைகளை கொலைசெய்த தந்தை web
தமிழ்நாடு

தஞ்சையில் கொடூரம்.. மனைவி மீதான கோபத்தில் 3 குழந்தைகளை கொன்ற கணவர்!

தஞ்சையில் மனைவி மீதான கோபத்தில் 3 குழந்தைகளை தந்தையே கொலை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

PT WEB

தஞ்சையில் மனைவி மீதான கோபத்தில் 3 குழந்தைகளை தந்தையே கொலை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில், தாய் ஒருவரின் மனம் தடம் புரண்டதால், 3 குழந்தைகளின் உயிரை தந்தையே பறித்த அதிர்ச்சிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

என்ன நடந்தது?

மதுக்கூர் - புலவஞ்சி கிராமத்தைச் சேர்ந்த உணவக ஊழியரான வினோத்குமாருக்கும், மன்னார்குடியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணமாகி, இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் இருந்தனர்.

முத்தான 3 பிள்ளைகளுடன் நல்லபடியாக சென்றுகொண்டிருந்த இவர்களின் இல்வாழ்வில், சமூக வலைத்தளத்தின் மூலம் புயல் வீசியுள்ளது.

மதுக்கூர் காவல் நிலையம்

வினோத்தின் மனைவிக்கு சமூக வலைத்தளம் மூலம் ஓர் இளைஞருடன் உருவான தகாத உறவின் விளைவாக கணவரையும் 3 பிள்ளைகளையும் விட்டுவிட்டு, அந்த இளைஞருடன் வாழ சென்றுள்ளார்.

இந்தப் பிரிவைத் தாங்க இயலாத வினோத், மதுவுக்கு அடிமையாகியுள்ளார். இப்படியே 6 மாதங்கள் கழிந்துவிட, கடந்த வியாழனன்று, 3 பிள்ளைகளுக்கும் பலகாரம் வாங்கிக் கொடுத்துள்ளார். குழந்தைகள் அதை சாப்பிட்டுக்கொண்டிருந்தபோதே, ஒவ்வொரு பிள்ளையாக கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு, அருகில் உள்ள மதுக்கூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.