தமிழ்நாடு

அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்ற தந்தை மகன் உயிரிழப்பு

அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்ற தந்தை மகன் உயிரிழப்பு

webteam

கரூரில் அமராவதி ஆற்றில் மூழ்கிய 7 வயது மகனை காப்பாற்ற முயன்ற தந்தையும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவ‌ம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே கொடையூரைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் தனது மகள் கார்த்திகா, மகன் கதிரேசனுடன் அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற சிறுவன் கதிரேசன் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கினார். அதிர்ச்சி அடைந்த சக்திவேல் மகனை காப்பாற்ற முயன்றபோது அவரும் நீரில் மூழ்கினார். மகள் கார்த்திகாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஆற்றில் குதித்து இருவரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் இருவரும் உயிரிழந்தனர்.