சென்னை மாநகராட்சியின் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம்
சென்னை மாநகராட்சியின் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் கோப்புப் படம்
தமிழ்நாடு

சென்னை: கனமழை தொடர வாய்ப்பு – பரபரப்பான ஆலோசனை வழங்கும் கட்டுப்பாட்டு மையத்துக்கு ஒரு விசிட்!

webteam

சென்னையில் இன்னும் ஒரிரு மணி நேரத்திற்கு மழை தொடர்வதற்கான வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர் மேன் பிரதீப் ஜான் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட இடங்களில் மழை தொடர்வதற்கான வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சென்னை வானிலை ஆய்வு மையமும், இன்னும் 24 மணி நேரத்துக்கு கனமழை வாய்ப்பிருப்பதாக கூறி எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்னும் மூன்று நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

heavy rain

இதையொட்டி சென்னை மாநகராட்சியின் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் இரவு பகலாக பணியாற்ற 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கூடியுள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரும், மண்டலம் வாரியாக கண்காணித்து வருகின்றனர்.

புதிய தலமுறையிடம் அவர்கள் பேசுகையில், “இதுவரை சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 23 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாக புகார் வந்துள்ளது. இதையடுத்து முறிந்து விழுந்த மரங்களை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்” என தெரிவித்தனர்.

மழை

அதேபோல் 160 இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதாகவும் தெரியவருகிறது. இதையடுத்து அனைத்து இடங்களிலும் மழைநீரை வெளியேற்றம் பணிகள் நடந்து வருகிறது. தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு மெற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு இங்கிருந்து ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து பொதுமக்கள் நேரடியாக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு அந்த பகுதியில் உள்ள பிரச்னைகளை தெரிவிக்க 1913 மற்றும் 1916 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மற்றும் 044 4567 4567 என்ற எண் ஆகியவை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சென்னை மாநகராட்சி மீட்பு பணிகளுக்கான பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.