புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே, விவசாயி ஒருவரின் டிராக்டரை வங்கி அதிகாரிகள் பறிமுதல் செய்ய முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் மங்கனூரைச் சேர்ந்த விவசாயி இருதயராஜ். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனியார் வங்கி ஒன்றில் 5 லட்சம் ரூபாய் விவசாயக் கடன் பெற்றுள்ளார். அதில் அவர் இரண்டே கால் லட்ச ரூபாயை திருப்பி செலுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஒரு தவணையை மட்டும் கட்டத் தவறியதற்காக வங்கி அதிகாரிகள் அவரின் டிராக்டரை பறிமுதல் செய்ய முயன்றுள்ளனர். தகவலறிந்த அப்பகுதி விவசாயிகள் வங்கி அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களை திருப்பி அனுப்பினர்.