வேதாரண்யம் கடைமடைப் பகுதியில் மேட்டூரில் தண்ணீர் திறந்து 10 நாட்களாகியும் அடப்பாற்றில் தண்ணீர் வரவில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்துள்னர்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் கடைமடைப் பாசனப் பகுதிக்கு அரிச்சந்திராநதியிலிருந்து பாமிணி அருகே பிரியும் அடப்பாறு சலக்கடை, சாக்கை வழியாக உம்பளச்சேரி வருகிறது. இந்த ஆற்றில் சரிவர கடந்த பல ஆண்டுகளாக தூர் வாரும் பணி நடைபெறாமல் அவசரகெதியில் குடிமரமத்து பணிகள், பாலம் கட்டும் பணிகள் நடைபெறுகிறது. இதனால் மேட்டூரில் கடந்த 19-ம் தேதி தண்ணீர் திறந்து பத்து நாட்களாகியும் அடப்பாறு, உம்பளச்சேரி வடக்குராஜன் வாய்கால், மகாராஜபுரம் தெற்கு ராஜன் வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறும் துளசாபுரம் சாக்கை, உம்பளச்சேரி, கரியாப்பட்டினம் போன்ற கடைமடை பகுதி பாசன வாய்க்கால்களில் இது வரை தண்ணீர் வரவில்லை.
அடப்பாற்றில் தண்ணீர் வருவது தாமதம் ஆவதால், இதன் மூலம் பாசன வசதி பெறும் சுமார் 3 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. காவிரியில் ஒரு மாதம் தாமதமாக தண்ணீர் திறந்தந்தால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது சம்பா சாகுபடியாவது காலத்தில் செய்யலாம் என எதிர்ப்பார்த்திருந்த விவசாயிகள் தண்ணீர் வருவதில் தாமதம் ஏற்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.