இடைக்கால பட்ஜெட் 2024-2025
இடைக்கால பட்ஜெட் 2024-2025 puthiya thalaimurai
தமிழ்நாடு

இடைக்கால பட்ஜெட் | “ஒரு சின்ன விஷயம் கூட விவசாயிகளுக்கு இல்லை...” - இளங்கீரன், விவசாயிகள் சங்கம்

webteam

இன்று மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மத்திய பட்ஜெட்டில் டெல்டா மாவட்ட விவசாயிகளின் எதிர்பார்ப்புகன் என்னவாக இருந்தது? பார்ப்போம்...

‘மத்திய அரசு விவசாய பொருட்களின் ஆதரவு விலையை அதிகப்படுத்தி அதனை சட்டமாக்க வேண்டும். பயிர் காப்பீடு தொகையின் மத்திய அரசின் பங்கை அதிகப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீடு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Farming

உரங்களுக்கான மானியத்தை அதிகரித்து பொட்டாஸ் உள்ளிட்ட உரங்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரிசி கோதுமை தவிர மற்ற விவசாய உற்பத்தி பொருளையும் அரசே கொள்முதல் செய்ய வேண்டும். இறக்குமதியை குறைக்க வேண்டும். எண்ணெய் வித்துக்கள் பருப்பு உள்ளிட்ட வகைகளுக்கும் கூடுதலாக மானியம் வழங்க வேண்டும்.

மாநில அரசின் நீர் பாசன திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டும். டெல்டா மாவட்டங்களில் வேளாண் சார்ந்த மதிப்பு கூட்டு பொருள் உற்பத்தி செய்யும் வகையில் விவசாயம் பாதிக்கப்படாத வகையில் தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும்’ ஆகியவை.

இன்றைய பட்ஜெட் தாக்கலில் மேற்கூறிய திட்டங்கள் நிறைவேறியதா? மேலும் விவசாய சங்கங்கள் எதிர்பார்ப்பது என்ன? இதுதொடர்பாக விவசாயிகளின் சங்கத்தைச் சேர்ந்த இளங்கீரன் அவர்களிடம் கேட்ட பொழுது,

இளங்கீரன்

“விவசாயிகளுக்கு பெரிய அளவில் அரசாங்கம் இதுவரை எதுவும் செய்ததில்லை. விவசாயிகளுக்கு முக்கியமானது நீர். இவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ‘இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் இணைப்போம்; விவசாயிகளின் வருமானத்தை நாங்கள் இரட்டிப்பாக்குவோம்; மின்சாரம் இலவசமாக கொடுப்போம்; சூரிய தகடு பொருத்தநடவடிக்கை எடுப்போம்’ என்று கூறியிருந்தார்கள். ஆனால் இதுபோன்ற எந்த விஷயமும் இதுவரை நடைபெறவில்லை. இது ஒட்டுமொத்தமாக விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்ததாக கடன் தள்ளுபடி. பல ஆயிரம் கோடிகள் கடன் உள்ள பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தள்ளுபடிசெய்யும் பட்சத்தில் விவசாய கடனை அரசு தள்ளுபடி செய்யலாம்தானே... இம்முறை அதை எதிர்பார்த்தோம். ஆனால் நடக்கவில்லை” என்றார்.