farmers protest
farmers protest pt desk
தமிழ்நாடு

விவசாயச் செய்திகள்: நாகை, நாமக்கல்.. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்!

webteam

நாகை மாவட்டம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் திருமால் தலைமையில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் துவங்கியதும் கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த விவசாயிகள் கூட்டத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். குறுவை சாகுபடியான எள், ஊளுந்து பதிப்பிற்கு அரசு நிவாரணம் அறிவித்து நான்கு மாதங்களுக்கு மேலாகியம இழப்பீட்டுத் தொகை இது வரை விவசாயிகளுக்கு வழங்கப்படாததைக் கண்டித்தும் கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழக அரசு தள்ளுபடி செய்த பயிர் கடனில் விவசாயிகள் செலுத்திய 10 சதவீத பங்குத் தொகையை திரும்ப விவசாயிகளுக்கு வழங்காமல் கூட்டுறவு சங்கங்கள் ஏமாற்றி வருவதை கண்டித்தும், அனைத்து விவசாயிகளும் கூட்டத்திலிருந்து வெளியேறி முழக்கங்கள் எழுப்பி அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்டம் செய்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Farmers

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில், பவர் கிரீட் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழக உயர்மின் அழுத்த கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு மட்டுமின்றி கூடுதல் இழப்பீடு மாற்றும் உதவித்தொகை மாத வாடகை ஆகியவை வழங்கிட வேண்டும் என தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் தொழில்துறை அரசாணை எண் 54 படி 10 மடங்கு பயிர்களுக்கு உரிய இழப்பீடு தொகை மற்றும் துறவு, கிணறு, ஆழ்துளை கிணறு, கட்.டங்களுக்கு இழப்பீடு தொகை மாத வாடகை வழங்கிட வேண்டும் எனவும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம்:

திருச்செங்கோட்டில் உயரழுத்த மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீட்டுத் தொகை ஊக்கத்தொகை வழங்கக் கோரியும் புதிய மின் திட்டங்களை கேபிள் மூலம் சாலையோரம் செயல்படுத்த கோரியும் உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் சுகந்தியிடம் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் பெருமாள் தலைமையில் மனு கொடுத்தனர்.