தமிழ்நாடு

கோவை: நிலங்களை கையகப்படுத்த நிர்வாகத்துக்கு அனுமதி தரவேண்டாம் - விவசாய பெண்கள் கோரிக்கை

Sinekadhara

விவசாய நிலங்களை தொழிற்பேட்டைக்காக கையகப்படுத்த நிர்வாக அனுமதிக்காக அனுப்பப்பட்ட பரிந்துரை கடிதத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, கோவை மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து பெண் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். 

கோவை மாவட்டம் அன்னூர் வட்டாரத்தில் 4 வருவாய் கிராமங்களும், மேட்டுப்பாளையம் வட்டாரத்தில் 2 வருவாய் கிராமங்களும் என 6 வருவாய் கிராமங்களில் 1504 ஹெக்டேர் நிலங்களை தொழிற்பேட்டை அமைக்க நிலம் கையகப்படுத்துவதற்கான நிர்வாக அனுமதியை வழங்க கோவை மாவட்ட ஆட்சியர் மூலம் TIDCO வின் முதன்மை இயக்குநர் தமிழக அரசிடம் கோரியுள்ளனர். இதனை சுட்டிக்காட்டி, தொழிற்பேட்டை அமையும் பட்சத்தில் 50,000 விவசாயிகளும், அவர்களை நம்பியுள்ள விவசாய தொழிலாளர்களுக்கும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக்கூறி விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.

அப்போது, மாவட்ட ஆட்சியர் வந்ததை பார்த்த பெண் விவசாயிகள் சிலர் அவர் காலில் விழுந்தனர். உடனே, அவர்களை தூக்கிய ஆட்சியர் சமீரன், மனுக்களை பெற்றுக்கொண்டார்.