தமிழ்நாடு

நெல் மூட்டைகளை விற்க காத்திருந்த விவசாயி உயிரிழப்பு

நெல் மூட்டைகளை விற்க காத்திருந்த விவசாயி உயிரிழப்பு

webteam

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விருத்தாசலம் அருகே மருங்கூர் கிராமத்த்தை சேர்ந்த விவசாயி கணேசன் தன் நிலத்தில் அறுவடை செய்த 35 நெல் மூட்டைகளை நேற்று முன் தினம் விருதாச்சலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு கொண்டு வந்துள்ளார்.இரு நாட்‌களாக நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யா‌ததால் விரக்தி அடைந்த நிலையில் நேற்று இரவு கணேசன் அங்கேயே உறங்கியுள்ளார்.இந்நிலையில் இன்று காலை அவர் உயிரிழந்த நிலையில் இருப்பதை கண்ட அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் மூட்டைகளைத் திறந்தவெளியில் வைக்கும் நிலையே‌ தற்போதுவரை தொடர்கிறது. மழையின்போது நெல் மூட்டைகள் நனைவதையடுத்து, குறைவான அளவிலேயே நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்‌பட்டு வருகிறது. ஏற்கனவே வறட்சியால் அறுவடை குறைந்த நிலையில், கொண்டு வந்த நெல் மூட்டைகளும் கொள்முதல் செய்யப்படாததால் அதிர்ச்சியில் விவசாயி கணேசன் உயிரி‌ந்ததாக மற்ற விவசாயிகள் தெரிவித்துள்ளன‌ர். இதனிடையே விவசாயி‌ கணேசனின் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என கடலூர் மாவட்ட பொறுப்பு ஆட்சியர் விஜயா தெரிவித்துள்ளார்.