chief secretary
chief secretary  pt desk
தமிழ்நாடு

மயானத்தை மரச்சோலையாக மாற்றிய விவசாயி: நேரில் அழைத்து பாராட்டிய தலைமைச் செயலாளர்

webteam

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் அரங்கூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் மக்கள் பயன்படுத்தும் மயானமொன்று உள்ளது. அந்த மயானத்தில் கம்பி வேலி அமைத்து தென்னை மரம், மாமரம், பலாமரம், கொய்யா மரம் போன்ற நலனும் நிழலும் தரும் மரங்களை கடந்த 16 வருடங்களாக பராமரித்து வந்துள்ளார் விவசாயியொருவர். இதுபற்றி மாவட்ட ஆட்சித் தலைவர், தலைமை செயலாளருக்கு அறிக்கை அனுப்பியிருந்தார். அந்த மரங்களை எல்லாம் அர்ஜுனன் (70) என்ற விவசாயிதான் நட்டு பராமரித்து வந்தார் என்ற தகவலையும் தெரிவித்திருந்தார்.

graveyard

விவசாய கூலியாக இருந்துவந்துள்ளார் அர்ஜூனன். தன் விவசாய பணியோடு சேர்த்து, மயானத்தில் மரங்களை நட்டு பசுமை சோலையாக மாற்றிய அர்ஜுனனை தலைமைச் செயலாளர் இறையன்பு சென்னை தலைமைச் செயலகத்துக்கு நேரில் அழைத்துள்ளார். இதையடுத்து அங்கு சென்ற அவருக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டி ஆயிரம் ரூபாய் நிதி உதவியும் அளித்தார்.

இதை ஒரு முன் உதாரணமாகக் கொண்டு அனைத்து கிராம இளைஞர்களும் தங்கள் பகுதி மயானத்தை பசுமை சோலையாக மாற்ற வேண்டும் என அர்ஜுனன் கோரிக்கை வைத்துள்ளார். இதேபோல தலைமைச்செயலாளருக்கும் அர்ஜூனன் கோரிக்கை வைத்துள்ளார். அதில், ‘இந்த மயானத்தில் சுற்றுச்சூழல் பாசன நேரம் இல்லை. அதை அதிகாரிகள் ஏற்படுத்தி தரவேண்டும்’ என்றுள்ளார். அந்த கோரிக்கையை ஏற்ற தலைமைச் செயலாளர், மாவட்ட ஆட்சித் தலைவருக்கு நேர்முக கடிதமும் அனுப்பியுள்ளார்.

farmer

இந்த செயல் மரம் வளர்க்கும் இயற்கை ஆர்வலர்களுக்கு விழிப்புணர்வும் ஊக்கமும் அளிக்கும் விதத்தில் உள்ளது என மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். மனிதன் மறைந்தாலும் மரங்கள் மறைவதில்லை!