தமிழ்நாடு

தற்கொலைக்கு முயன்று காமெடியில் முடிந்த கதை

தற்கொலைக்கு முயன்று காமெடியில் முடிந்த கதை

webteam

வீட்டில் மனைவியுடன் ஏற்பட்ட சண்டையை அடுத்து தற்கொலைக்கு முயன்ற நபரை முப்படைகளின் உதவியோடு காவல்துறையினர் மீட்டது பரபரப்பை உண்டாகி உள்ளது.

குடிபோதையில் இருந்த நபர் ஒருவர், இன்று மாலை அடையார் கூவம் ஆற்றின் வழியாக போய் கொண்டிருந்த பயணிகளிடம் "நான் சாகப்போறேன் டாடா பை பை" என்று கூறிவிட்டு குதித்தார். வீட்டில் மனைவியுடன் நடந்த சண்டையை அடுத்து, இந்த முடிவு எடுத்த அந்த நபருக்கு இங்கும் தோல்வியே மிஞ்சியது. அடையாறு ஆற்றில் இடுப்பளவு மட்டுமே தண்ணீர் இருந்ததால், குதித்த அவர் மூழ்க முடியாமல் நின்று கொண்டிருந்தார்.

அந்த வழியாக பயணித்த அனைவரும் தங்கள் வாகனங்களை அடையார் பாலத்தில் நிறுத்தி விட்டு, வேடிக்கை பார்த்தபடி நின்று கொண்டிருந்தனர். அதற்குள் காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர், போக்குவரத்து காவல்துறையினர் அந்தப் பகுதிக்கு வந்தனர். உடனடியாக அருகே இருந்து ஒரு சிறிய படகு கொண்டுவரபட்டு அதை கொண்டு அவரை மீட்டனர். முப்படைகளின் உதவியோடு மீட்கப்பட்ட அவர் டாடா காட்டி கொண்டே வி.ஐ.பி. போல் மேலே வந்தார். ‘இதுக்கா இந்த பில்ட் அப்’ என்று சிரித்தவாறு வேடிகைப் பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்கள் களைந்து சென்றனர்.