தமிழ்நாடு

தாம்பரம் அருகே போலி ரயில்வே டிக்கெட் பரிசோதகர் கைது..!

தாம்பரம் அருகே போலி ரயில்வே டிக்கெட் பரிசோதகர் கைது..!

Rasus

ஊடகங்களில் வெளியான செய்தியால், போலி ரயில்வே டிக்கெட் பரிசோதகர் கைது செய்யப்பட்டார்.

சென்னை தாம்பரம் அடுத்த புதுபெருங்களத்தூர், கலைமகள் தெருவில் அல் ஜியானி(31) என்பவர் கடந்த ஒரு மாத காலமாக குடியிருந்து வந்துள்ளார். இவர் ரயில்களில் டிக்கெட் பரிசோதகர் போல் சென்று டிக்கெட் இல்லாத பயணிகளிடம் பணம் பறிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து இவரால் பல பேர் பணத்தை இழந்த நிலையில் இவர் குறித்து பயணி ஒருவர் ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது இவர் போலியானவர் என கூற இது குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானது.

இந்த செய்தியை பார்த்த பெருங்களத்தூரை சேர்ந்த நபர் ஒருவர் பீர்க்கன்கரணை போலீசாருக்கு அல் ஜியானி குறித்து தகவல் கொடுத்துள்ளார். அதனடிப்படையில் நேற்றிரவு சேலத்தை சேர்ந்த அல் ஜியானியை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து போலி ரயில்வே டிக்கெட் பரிசோதகர் அடையாள அட்டை , அபராதம் வசூலிக்கும் புத்தகம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இவர் மீது ஏற்கெனவே சேலம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு நிலுவையில் உள்ளதால் பீர்க்கன்காரணை போலீசார் சேலத்திற்கு ஒப்படைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.