போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் உடந்தையாக இருந்ததாக சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்தைச் சேர்ந்த நுண்ணறிவுப்பிரிவு தலைமைக்காவலர் முருகன் கைது செய்யப்பட்டார்.
போலி ஆவணங்களை அளித்து பாஸ்போர்ட் பெற முயன்ற ராமலிங்கம் என்பவர், கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் மணலியைச் சேர்ந்த யூசூப் என்பவரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், போலி ஆவணங்களை அளித்து பாஸ்போர்ட் பெறுபவர்களுக்கு, நுண்ணறிவுப்பிரிவு காவல்துறையைச் சேர்ந்த காவலர்கள் சிலர் பணம் பெற்றுக்கொண்டு ஒப்புதல் சான்று அளித்தது தெரியவந்தது. அதனடிப்படையில் தலைமைக் காவலர் முருகனை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் மேலும் 3பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.