தமிழ்நாடு

வரும் ஞாயிறு முதல் ஊரடங்கா ? உண்மை இதுதான் !

வரும் ஞாயிறு முதல் ஊரடங்கா ? உண்மை இதுதான் !

webteam

சென்னை, கோவை, மதுரை ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு என சமூக வலைதளங்களில் போலி செய்தி வலம் வந்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் வரும் ஜூலை 31 ஆம் தேதிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனா பரவல் தற்போது சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் குறைந்து வருகிறது. இதுவரை ஐந்து கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பிறகும் ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே போக முடியாது என மருத்துவ நிபுணர் குழுவும், அமைச்சர்களும் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிகளிலும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்ற போலி செய்தி சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. ஏற்கெனவே முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது வெளியிடப்பட்ட செய்திகளை தற்போது பரப்பி வருகின்றனர். அதில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் புதன்கிழமை வரை 3 மாநகராட்சிகளிலும் முழு ஊரடங்கு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் பொய்யான செய்தி என்பது குறிப்பிடத்தக்கது.