தமிழ்நாடு

நாமக்கல்: 3 கி‌லோ கோழி இறைச்சி ரூ.99; சிக்கன் வறுவல் இலவசம்!!

webteam


சிக்கன் உண்பதால் கொரோனா வராது என்பது பற்றி வி‌ழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நாமக்கல்லில் 3 கி‌லோ கோழி இறைச்சி 99 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அத்து‌டன் சிக்கன் வறுவல் இலவசமாக வழங்கப்பட்டது.

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நீள்கிறது. அதிகப்பட்சமாக மகாராஷ்டிராவில் 38 பேருக்கும், கேரளாவில் 24 பேருக்கும், ஹரியானாவில் 14 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 14 பேரும், கர்நாடகாவில் 7 பேரும், ராஜஸ்தானில் 4 பேரும், டெல்லியில் 6 பேரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நபர் குணமடைந்தபோதும், அவர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார். இதற்கிடையே கோழிக்கறி உட்கொண்டால் கொரோனா வைரஸ் தாக்கும் என சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக தகவல்கள் பரவின. இதனால் கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை கடும் வீழ்ச்சி கண்டுள்ளது.

இந்நிலையில் கோழிக்கறி மற்றும் முட்டை உண்பதால்‌ எந்த பாதிப்பும் வராது என்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில், கோ‌ழிக்கறி வியாபாரிகள் சிக்கன் வறுவலை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினர். அத்துடன் 3 கிலோ கோழிக்கறியை 99 ரூபாய்க்கு விற்பனை செய்தனர்.