தமிழ்நாடு

வட மாநிலத்தவர் துன்புறுத்தப்படுவதாக பொய் செய்தி: இணையதள சி.இ.ஓ ஆசிரியர் மீது வழக்கு

webteam

தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர்கள் துன்புறுத்தப்படுவதாக பொய்யான செய்தி வெளியிட்ட opindia என்ற இணையதளத்தின் சி.இ.ஓ மற்றும் ஆசிரியர் உள்ளிட்ட இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆவடியை அடுத்த திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த சூர்யபிரகாஷ் (38) என்பவர் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராக உள்ளார். இவர், திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில், ஓபி இந்தியா (opindia.com ) என்ற ட்விட்டர் பக்கத்தின் மூலமாக பொய்யான வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

இது தமிழ்நாட்டிற்கு வந்துள்ள வெளிமாநில தொழிலாளர்கள் மத்தியில் அச்சத்தையும், உள்ளுர் மக்களிடையே கருத்து வேறுபாட்டையும்ட ஏற்படுத்தியுள்ளது. மேற்கண்ட வதந்தியை பரப்பி வரும் ஓபி இந்தியா சி.இ.ஓ ராகுல் ரூசன், எடிட்டர் நுபுர் J சர்மா மற்றும் இதனோடு தொடர்புடைய மற்ற நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் திருநின்றவூர் காவல் ஆய்வாளர் புகாரின் பேரில் திருநின்றவூர் காவல் ஆய்வாளர் U/s 153(A), 505(1),(b), 505 (2) IPC உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.