தமிழ்நாடு

திருச்செந்தூர் கோவிலில் போலி மயில் சிலை ! அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு

திருச்செந்தூர் கோவிலில் போலி மயில் சிலை ! அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு

Rasus

திருச்செந்தூர் முருகன் கோவில் எதிரே இருந்த பழங்கால மயில் சிலை திருடப்பட்டு போலி சிலை நிறுவப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் உள்பட ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோவில் கருவரை எதிரே பழங்கால மயில் சிலை வழிபாட்டுக்காக வைக்கப்பட்டிருந்தது. கடந்த 2017-ஆம் ஆண்டு இந்த சிலையை கோவில் பணியாளர்களே பெயர்த்தெடுத்து அதற்கு பதிலாக போலி சிலை வைத்ததாக கூறப்படுகிறது. இந்த மோசடி தொடர்பான தகவல் பரவியதால், அச்சம் அடைந்த பணியாளர்கள் மீண்டும் பழங்கால சிலையை அதே இடத்தில் வைத்துள்ளனர். அப்போது சிலையின் தலைப் பகுதி சேதம் அடைந்துள்ளது.

இது தொடர்பாக தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரி
பொன்.மாணிக்கவேல் நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது சிசிடிவி இணைப்புகளை துண்டித்து சிலை மாற்றப்பட்டது தெரியவந்ததை அடுத்து, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, காவல் பணியாளர்கள் சுவாமிநாதன், ராஜகுமார், சுரேஷ் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.