தமிழ்நாடு

வரும் ஞாயிறன்று முழு ஊரடங்கு: நியாயவிலைக் கடைகள் செயல்படாது என அறிவிப்பு

வரும் ஞாயிறன்று முழு ஊரடங்கு: நியாயவிலைக் கடைகள் செயல்படாது என அறிவிப்பு

EllusamyKarthik

வரும் ஞாயிறு (09.01.2022) அன்று கொரோனா மற்றும் ஒமைக்ரான் திரிபு பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு நடைமுறை அமல் செய்யப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் முழு ஊரடங்கு காரணமாக நியாயவிலைக் கடைகள் செயல்படாது என உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செய்தி வெளியிட்டுள்ளது. 

ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு காரணமாக பொது விநியோகத் திட்ட நியாயவிலைக் கடைகள் 09.01.2022 அன்று செயல்படாது. அன்றைய தினம் பொங்கல் பரிசு பெற டோக்கன்கள் பெற்ற அட்டைதாரர்களுக்கு 13.01.2022-க்கு முன்பாக பரிசு பொருட்கள் விநியோகம் நடைபெற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனை ஆணையாளர் ராஜாராமன் தெரிவித்துள்ளார்.