தமிழ்நாடு

விடைத்தாள் திருத்தியதில் தவறு: 1,070 ஆசிரியர்களுக்கு அண்ணா பல்கலை. தடை

விடைத்தாள் திருத்தியதில் தவறு: 1,070 ஆசிரியர்களுக்கு அண்ணா பல்கலை. தடை

webteam

விடைத்தாள் திருத்தியதில் தவறு செய்ததால் தேர்வு தொடர்பான பணிகளில் ஈடுபட ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் தடைவிதித்துள்ளது.

விடைத்தாள் திருத்தும் பணியில் தவறாக மதிப்பீடு செய்தது தெரியவந்ததால் 1,070 ஆசிரியர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. மறுமதிப்பீட்டின்போது 20க்கும் அதிகமான மதிப்பெண் வித்தியாசம் இருந்தால், முதலில் அந்த விடைத்தாள்களை திருத்திய ஆசிரியர்கள், மேற்கொண்டு தேர்வுப் பணிகளில் ஈடுபடுவதற்கு அண்ணா பல்கலைக்கழகம் தடைவிதித்துள்ளது. இதில் மதிப்பெண் வித்தியாசத்தை பொறுத்து தண்டனை‌ வேறுபடுகிறது.

20 முதல் 30 மதிப்பெண் வரை வித்தியாசம் இருந்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு ஓராண்டு தடையும், 31 முதல் 40 மதிப்பெண் வித்தியாசம் இருந்தால் இரண்டு ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. 41 மதிப்பெண்களுக்கு மேல் வித்தியாசம் இருந்ததால், விடைத்தாள்களை திருத்திய 273 ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுகள் வினாத்தாள் தயாரிப்பு உள்ளிட்ட தேர்வுப் பணிகளில் ஈடுபட அண்ணா பல்கலைக்கழகம் தடை விதித்துள்ளது.