தமிழ்நாடு

திருமுருகன் காந்திக்கு காவல் நீட்டிப்பு

திருமுருகன் காந்திக்கு காவல் நீட்டிப்பு

webteam

போரில் மடிந்த ஈழத்தமிழர்களுக்கு மெரினா கடற்கரையில் மெழுவர்த்தி ஏந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த முயற்சி செய்த திருமுருகன் காந்தியின் நீதிமன்றக் காவலை ஆகஸ்ட் 17 வரை நீட்டிப்பு செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருமுருகன் காந்தி உள்ளிட்டோருக்கு நீதிமன்ற காவல் முடிந்ததையடுத்து, இன்று சென்னை எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோருக்கு ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை நீதிமன்றக்காவல் நீட்டிப்பு செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

அப்போது நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமுருகன் காந்தி, காவிரி டெல்டா பகுதிகளைப் பெட்ரோலிய மண்டலமாக அறிவித்ததற்கு எதிராக தமிழக மக்கள் போராடுவார்கள் எனத் தெரிவித்தார். 
இலங்கையில் நடந்த இனப்படுகொலையைக் கண்டித்து கடந்த மே மாதம் 21 ஆம் தேதி சென்னை மெரினாவில் காவல்துறையின் அனுமதியின்றி ஈழத்தமிழர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தியதாகக் கூறி திருமுருகன், டைசன், இளமாறன், அருண், ஆகியோர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.