தமிழ்நாடு

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தீவிர தமிழக அரசு முயற்சி

webteam

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் முயற்சியாக சில ஆவணங்களை தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிற மாநிலங்களில் நீட் அமலில் உள்ள நிலையில், தமிழக அரசுக்கு மட்டும் விலக்கு கேட்பதாக மத்திய அரசு கருதுகிறது. இந்த நிலையில், விலக்கு கோரும் தமிழக அரசின் வாதத்திற்கு வலு சேர்ப்பதற்காக, போதிய ஆவணங்களை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. நீட் தேர்வில் இருந்து விலக்குப் பெற மாநில அதிகாரத்தைப் பயன்படுத்த முடியுமா? அதற்கேற்ற அவசர சட்டத்தை கொண்டுவர முடியுமா? போன்ற கேள்விகளை முன்வைத்து சட்டரீதியான ஆலோசனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் அறிவிப்பு விரைவில் வரும் என அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் மாஃபா பாண்டியராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.