ஆந்திராவில் கலவகுண்டா அணை நிரம்பியுள்ளதால் வேலூர் மாவட்டத்தில் உள்ள பொன்னை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் பெய்து வரும் கனமழையால், சித்தூரில் உள்ள கலவகுண்டா அணை நிரம்பியுள்ளது. அந்த அணையிலிருந்து பொன்னை ஆற்றிற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், பொன்னை ஆற்றங்கரையோர பகுதிக்கு செல்ல வேண்டாம் என வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், தண்டோரா மூலமும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு துறை அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.