தமிழ்நாடு

புதிய‌ பாடத்திட்ட வரைவு: கருத்து தெரிவிக்க அவகாசம் நீட்டிப்பு

புதிய‌ பாடத்திட்ட வரைவு: கருத்து தெரிவிக்க அவகாசம் நீட்டிப்பு

rajakannan

புதிய பாடத்திட்ட வரைவு குறித்து கருத்து தெரிவிக்க மேலும் 7 நாள்கள் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கல்வியாளர்களின் வேண்டுகோளை ஏற்று இந்த அவகாச நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். 

தமிழகத்தில் 11, 12 வகுப்புகளுக்கான பாடத்திட்டம் 14 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றியமைக்கப்படுகிறது. 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம் 7 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றப்படுகிறது. புதிய பாடத்திட்டத்திற்கான வரைவு அறிக்கையை தயாரிக்க 200 பேர் கொண்ட உயர்மட்ட ஆசிரியர்கள் குழு அமைக்கப்பட்டது. அக்குழு புதிய பாடத்திட்டத்தின் வரைவு அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்தது. இந்த வரைவு அறிக்கை பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தில் நவம்பர் 20-ம் தேதி வெளியிடப்பட்டது.